கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த மையம் தற்போது செயல்படாமல் உள்ளது. இதனால் அந்த மையத்தை சாலையோர வியாபாரிகள் தங்களின் கடையாக மாற்றி உள்ளனர். எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு மீண்டும் போலீஸ் உதவி மையம் செயல்பட வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாகும்.
-சுந்தரேஸ்வரன், காரவள்ளி.