சேதமடைந்த அங்கன்வாடி மையம்

Update: 2025-03-23 17:12 GMT

பர்கூர் தாலுகா பாலேப்பள்ளி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றன. இந்த கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுகிறது. இதனால் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப பெற்றோர் மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் அங்கன்வாடி மையத்தில் முறையான கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை. இதன் காரணமாக குழந்தைகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.

-வனராஜ், பர்கூர்.

மேலும் செய்திகள்