கம்பம் உழவர் சந்தை அருகே உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் முறையான பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து வருகிறது. இதனால் குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். எனவே கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.