திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூாி அருகே டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இங்கு மது அருந்திவிட்டு வருபவர்கள் போதை தலைக்கேறியதும் அந்த வழியாக செல்லும் கல்லூரி மாணவிகளிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை தடுக்க டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.