கள்ளக்குறிச்சி அடுத்த ரங்கப்பனூரில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இங்கு சிகிச்சைக்கு வரும் மக்கள் ஒருவித பயத்துடனேயே வந்து செல்கின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சேதமடைந்த சுகாதார நிலைய கட்டிடத்தை அகற்றி விட்டு புதியதாக கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.