செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம்-திருநீர்மலை செல்லும் முதன்மை சாலையில் நாகல்கேணி பகுதியில் தினமும் ஏராளமான வாகனகள் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் பணிக்காக பள்ளம் தேண்டப்பட்டது. அதற்கான பணி முடிந்த பின்னரும் இந்த பள்ளத்தை ஊழியர்கள் சரியாக மூடாமல் சென்று விட்டனர். இதனால் வாகனஓட்டிகள் மிகவும் சிரமபடுகின்றனர். சிலநேரம் சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் பள்ளத்தை சரியாக மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.