செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம், திருநீர்மலை சாலை வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. அதில் பெரும்பாலான வாகனங்கள் கனரக வாகனங்களாக உள்ளது. குறிப்பாக, காலை நேரங்களில் இந்த வாகனங்கள் கடந்து செல்வதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர் சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே, தாம்பரம் போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.