திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல், பச்சையம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இந்தநிலையில் கோவிலின் நுழைவு வாயிலின் முன்பு கழிவுநீர் தேங்குவதால், துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. எனவே நகராட்சி அதிகாரிகள் கழிவுநீரை அகற்றி, இந்த பகுதியை சுத்தமாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.