திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம், மோரை நியூ காலனி பிரதான சாலையில் சிலர் மீன்கடைகள் வைத்துள்ளனர். மீன்களை சுத்தம் செய்யும் கழிவுநீர் சாலையில் விடப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன் சாலையில் தேங்கி இடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதியில் கொசு தொல்லையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.