தெருநாய்கள் தொல்லை

Update: 2025-03-23 11:57 GMT
அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையானது முக்கிய சாலையாக உள்ளது. அரசு தொழிற்பயிற்சி நிலையம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலகங்களும், கடைகளும் உள்ள பகுதியாகும். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அதிலும் கலெக்டர் அலுவலக வளாகத்திலும் தெருநாய்கள் அதிகளவில் சுற்றி வருகின்றன. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும், அரசு அதிகாரிகளும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இதுதொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்