கோத்தகிரி மார்க்கெட்டில் வியாபாரிகள் பயன்படுத்த கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்த கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. இதன் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த கழிப்பிடத்தை வியாபாரிகள் பயன்படுத்த தயங்குகின்றனர். மேலும் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. அத்துடன் தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.