கால்வாயில் அடைப்பு

Update: 2025-03-23 10:45 GMT

கோத்தகிரி நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் பெரும்பாலான இடங்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மழை பெய்தால் கால்வாயில் தண்ணீர் செல்ல முடிவது இல்லை. மேலும் கழிவுநீரும், மழைநீரும் கலந்து சாலைகளில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்டு உள்ள அடைப்பை உடனடியாக அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்