
உக்கடம் பகுதியில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலத்தின் ஒருபுறத்தில் தெருவிளக்குகள் முற்றிலும் ஒளிரவில்லை. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்குள்ள தெருவிளக்குகளை பழுது நீக்கி மீண்டும் ஔிர வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.