அரக்கோணம் சுவால்பேட்டை காந்தி ரோட்டில் மூதறிஞர் ராஜாஜியின் முழு உருவச்சிலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சிலையில் உள்ள ஊன்று கோல் இல்லாமலும், இடது கை உடைந்தும் காணப்படுகிறது. அந்தச் சிலையை நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இனியாவது, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதம் அடைந்த ராஜாஜி சிலையை சீர் செய்வார்களா?
-கணேசன், அரக்கோணம்.