சீர்காழி நகரம் கோவிந்தராஜன் நகர் எதிர் புறம் சுடுகாடு உள்ளது. சுடுகாடு முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. இளநீர் மட்டைகள், பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் செடி,கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் அங்கு விஷப்பூச்சிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுடுகாட்டுக்கு இறுதி சடங்கு செய்ய வருபவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுடுகாட்டை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.