வாலாஜா பஸ் நிலைய வளாகப் பகுதியில் தினமும் காலை, மாலை வேளைகளில் பஸ் நிலைய இருபக்க நுழைவு வாயில்களில் ஆக்கிரமிப்பு கடைகள், தள்ளுவண்டி கடைகளால் பயணிகளுக்கு இடையூறாக உள்ளது. ஆக்கிரமிப்பால் பஸ்கள் உள்ளே வெளியே சென்று வர சிரமப்படுகின்றன. பொதுமக்கள், பயணிகள் பஸ்களில் ஏற, இறங்க சிரமப்படுகின்றனர். ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தேவராஜன், வாலாஜா.