விபத்து அபாயம்

Update: 2025-03-23 09:51 GMT

அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவில் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளையும், நடந்து செல்பவர்களையும் குரைத்துக்கொண்டே கடிக்க பாய்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து வருகின்றனர். மேலும் இவை சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்