நடவடிக்கை தேவை

Update: 2025-03-23 08:51 GMT

குமரி மாவட்டத்தில் நகர பஸ்களில் முன் பகுதியில் பெண்களும், பின் பகுதியில் ஆண்களும் பயணம் செய்து வருகின்றனர். ஆனால், சமீப காலமாக பஸ்களின் பின் பகுதியிலும் பெண்கள் ஏறுவதாலும் இருக்கையை பிடிப்பதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. மேலும், கடைசி இருக்கைகளில் பெண்கள் உட்கார்ந்து கொள்வதாலும் வீண் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, பயணிகள் நலன்கருதி பஸ்களில் பழைய நிலை தொடர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்