வெள்ளக்கரை ஊராட்சி வி.காட்டுப்பாளையத்தில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை சாலையில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் விரட்டி கடிக்கப் பாய்கின்றன. இதனால் வாகனஓட்டிகள் கீழே விழுந்து விபத்துகளில் சிக்கிக்கொள்ளும் அவல நிலை உருவாகியுள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.