விழுப்புரம் தேவநாதசுவாமிநகர் பகுதி தெருக்களில் அதிகளவில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் செல்லும் சிறுவா்கள், பொதுமக்களை கடிக்க விரட்டுவதால் அவர்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனஓட்டிகளையும் விரட்டுவதால் அவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை பிடிக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.