செஞ்சி காந்தி கடைவீதியில் கடை வைத்திருக்கும் பொதுமக்கள் சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில சமயங்களில் வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்ளும் நிலையும் உருவாகியுள்ளது. எனவே போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து ஆக்கிரமிப்பை அகற்றி சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.