லாரிகளால் விபத்து அபாயம்

Update: 2025-03-16 17:51 GMT
கள்ளக்குறிச்சி சாலையில் அரியபெருமானூர் வழியாக எம்.சாண்ட் மண்ணை ஏற்றிச்செல்லும் லாரிகளின் பின்புற கதவு மூடாமல் செல்கின்றன. இதனால் அதில் இருந்து மண் சாலையில் கொட்டும்போது, அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகளின் கண்களில் விழுவதால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்