அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தில் நிழற்குடை இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர். எனவே பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.