ஆபத்தான அங்கன்வாடி மைய கட்டிடம்

Update: 2025-03-16 14:59 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் விக்கிரமங்கலம் திரவுபதி அம்மன் கோவில் தெருவில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மைய கட்டிடம் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதையடுத்து அருகே உள்ள மாற்று கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் சிதிலமடைந்த கட்டிடம் அகற்றப்படாமல் அதே இடத்தில் உள்ளதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு அங்கன்வாடி மையத்திற்கு என புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்