செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் - செய்யூர் சாலையில் ரெயில்வே லெவல் கிராசிங் உள்ளது. காலை மற்றும் மாலை வேலையில் அந்த பகுதியை ரெயில் கடந்து செல்லும் வரையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் மிகவும் அவதி அடைகின்றனர். இங்கு ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பணி இன்னும் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி மேம்பால பணியை தொடங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடக்கை எடுக்க வேண்டும்.