சிதலமடைந்த மின்கம்பம்

Update: 2025-03-16 14:32 GMT

திருவள்ளூர் மாவட்டம், பழைய பல்லாவரம் பகுதியில் உள்ள கிருஷ்ணா தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மின்கம்பம் சிதலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் அருகே சில நேரம் சிறுவர்கள் விளையாடுகின்றனர். சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே மின்வாரிய துறை அதிகாரிகள் ஆபத்தை உணர்ந்து உடனடியாக இந்த பகுதியில் புதிய மின்கம்பத்தை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்