தற்காலிக வாகன நிறுத்துமிடம்

Update: 2025-03-16 10:31 GMT

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில் கோத்தகிரி பகுதியில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி ஏற்படுத்தி தரப்படவில்லை. இதனால் அவர்கள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சிலர், வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் கோத்தகிரி பகுதியை தவிர்த்துவிட்டு ஊட்டி போன்ற வேறு பகுதிக்கு சென்றுவிடுகின்றனர். எனவே கோத்தகிரி பகுதியில் கோடை சீசன் முடியும் வரை சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்த தற்காலிக வாகன நிறுத்துமிடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்