கூடலூர் நகரில் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. கொசுக்கடியால் தவித்து வருகிறார்கள். அதுவும், மின்தடை ஏற்பட்டுவிட்டால் மின்விசிறிகளை இயக்க முடியாததால் கொசுத்தொல்லை மேலும் அதிகரித்து விடுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் கூட நிலவுகிறது. எனவே சுகாதார பணிகளை மேம்படுத்தி கொசுத்தொல்லையை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.