கரூர் ஒன்றியம் நெரூர் பார்க் நகர், கிருஷ்ணன் கோவில் தெரு மேல்புறம் பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் மழைபெய்யும்போது மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.