இடையக்கோட்டை அருகே உள்ள மார்க்கம்பட்டி பகுதியில் இடையக்கோட்டை-ஒட்டன்சத்திரம் சாலையோரம் குழாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. தொடர்ந்து மண் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மண் குவியலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.