நாமக்கல்-சேலம் ரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனி, காவேரி நகர், ராஜீவ்காந்தி நகர் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர், நடந்து செல்வோரை தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவார்களா?
-குமரன், நாமக்கல்.