கம்பம் வடக்கு போலீஸ் நிலைய பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடையில் இருக்கை வசதி செய்யப்படவில்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் வயதானவர்கள், கர்ப்பிணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிழற்குடையில் இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும்.