வானமாதேவி ஊராட்சி பெத்தாங்குப்பத்தில் தனியார் கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. அங்கு போதிய இடவசதி இல்லாததால் அத்தியாவசிய பொருட்களை போதுமான அளவுக்கு இருப்பு வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு முறையாக அத்தியாவசிய பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அரசு இடத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் எதிர்பார்க்கின்றனர்.