நடுவீரப்பட்டு தெற்கு தெரு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள புளியந்தோப்பில் மதுப்பிரியர்கள் மது குடித்து விட்டு போதை தலைக்கேறியதும் அந்த வழியாக செல்லும், மாணவா்கள் மற்றும் பெண்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் அந்த வழியாக ஒருவித அச்சத்துடனேயே பொதுமக்கள், மாணவர்கள் சென்று வருகின்றனர். எனவே அட்டகாசம் செய்து வரும் மதுப்பிரியர்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.