விக்கிரவாண்டி அருகே செம்மேடு கிராமத்தில் பன்றிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை சாலைகளில் திடீரென குறுக்கே ஓடுவதால் வாகன ஓட்டிகள் அதில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். மேலும் குடியிருப்புகளை சுற்றி பன்றிகள் மேய்ந்து வருவதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.