விக்கிரவாண்டியில் விழுப்புரம்- திருவண்ணாமலை சாலை அருகே அமைந்துள்ள வி.புதுப்பாளையம் கிராமத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மிகவும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் கழிவுநீரானது தேங்கி நிற்பதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டியது அவசியம்.