கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் அறையில் இருக்கைகள் அமைக்கவில்லை. இதனால் பஸ் ஏற வரும் பெண்கள், முதியவர்கள் உள்பட அனைவரும் கால்கடுக்க நின்று பஸ் ஏறிச் செல்லும் அவலநிலை உருவாகியுள்ளது. சிலர் கால் வலி தாங்க முடியாமல் தரையிலேயே அமர்ந்து விடுவதையும் பார்க்க முடிகிறது. இதை தவிர்க்க காத்திருக்கும் அறையில் இருக்கைகள் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.