பூட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம்

Update: 2025-03-09 14:12 GMT

கரூர் அருகே உள்ள ஆண்டாங்கோவில் கீழ்ப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் இப்பகுதி அமராவதி ஆற்றை ஒட்டிய பகுதி என்பதால் இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு உரிய கழிப்பிடம் மற்றும் துணி துவைத்தல் உள்ளிட்ட வசதிகளுக்காக அப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டு அதை அப்பகுதி பெண்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த சுகாதார வளாகம் கடந்த சில மாதங்களாக பயன்பாடு இன்றி பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்