திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள பஸ் பனிமனையில் பொது கழிப்பிடம் ஒன்று உள்ளது. இந்த கழிப்பிடத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் முழுவதுமாக சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும், குழாய்களில் தண்ணீர் வராததால் டிரம்களில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் தேவைப்பட்டால் வாளியில் பிடித்து அதனை பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.