சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த ரெயில் நிலையம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும். தற்போது இங்கு வரும் பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. இதனால் ரெயில் நிலையத்தில் பயணிகள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே, ரெயில்வே துறை அதிகாரிகள் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.