சென்னை பிராட்வே பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள இலவச கழிப்பிடம் சரியான முறையில் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கழிவறைக்கு வரும் பயணிகள் மூக்கை மூடிக்கொண்டு வருகின்றனர். எனவே, அதிகாரிகள் கழிவறையை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?