சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா காட்டேந்தல் சுக்கானூரணி ஊராட்சி சூசையப்பர்பட்டணம் கிராமம், ஆதிதிராவிடர் காலனியில் உள்ள கண்மாய் பல நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் இந்த கண்மாயில் சுற்று சுவர் மற்றும் படிக்கட்டு வசதியின்றி காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாயை தூர்வாரி சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.