பந்தலூரில் நெல்லியாளம் நகராட்சிக்கு சொந்தமான கழிப்பறைகள் பராமரிப்பு இன்றி சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய்களும் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் அந்த கழிப்பறைகளை சுகாதாரமாக பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.