கூடலூர் மைக்காமவுண்ட் பகுதியில் பள்ளத்தாக்கான இடத்தில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் நடைபாதை பல இடங்களில் உடைந்து காணப்படுகிறது. இதை சீரமைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு நேரில் சென்று பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.