கம்பத்தில் இருந்து உத்தமபாளையம் வழியாக தேவாரம், போடி செல்லும் பஸ்கள் உத்தமபாளையம் கிளை கருவூலம் எதிரே நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி, இறக்கிச்செல்கின்றனர். அந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதற்கான பணிகள் தொடங்கியது. ஆனால் தரைத்தளம் மட்டும் கட்டப்பட்டு மேற்கூரை அமைக்கவில்லை. இதனால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே நிழற்குடைக்கான மேற்கூரையை விரைவாக அமைக்க வேண்டும்.