உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரி அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் சுகாதார வளாக வசதி செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. எனவே அங்கு சுகாதார வளாகம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.