சேந்தமங்கலம்-ராசிபுரம் பிரதான சாலையில் பழைய சினிமா தியேட்டர் அருகே ஜங்கலாபுரத்திற்கு பிரிந்து செல்லும் சாலை அமைந்துள்ளது. அங்குள்ள வளைவில் தடுப்புச்சுவர் இல்லாமல் அபாய நிலையில் ஒரு கிணறு காணப்படுகிறது. அவ்வழியே வாகன போக்குவரத்து அடிக்கடி இருப்பதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி இந்த அபாய கிணற்றுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
-சங்கரன், சேந்தமங்கலம்.