தியாகதுருகம் அடுத்த கண்டாச்சிமங்கலம் ஊராட்சியில் நாகலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் மேற்கூரையானது பலத்த சேதமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து கீழே விழுந்து வருகின்றன. தற்போது அந்த கட்டிடம் மிகவும் பலவீனமடைந்து காணப்படுவதால் அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவது தொடர்பாக அங்கு பொது மக்கள் செல்ல பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் பழைய கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டுஅங்கு புதிய கட்டிடம் அமைத்துத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.