உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாரதாரநிலையம் அமைந்துள்ளது. ஆனால் இங்கு கர்ப்பிணிகளுக்கு சத்து மாத்திரை உள்ளிட்ட மாத்திரை வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த கர்ப்பிணிகள் சத்து மாத்திரைகள் உள்ளிட்டவற்றை வாங்க 7 கி.மீட்டர் தொலைவில் உள்ள குஞ்சரம் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனைக்கு சென்று வர வேண்டிய அவல நிலை ஏற்பட்டு வருவதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.