பரங்கிப்பேட்டை அருகே பூவாலையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால் சமூகவிரோதிகள் இரவு வேளைகளில் பள்ளிக்குள் புகுந்து மது அருந்துவது மட்டுமின்றி மதுபாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் கேட் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.